Sunday 19 December 2010

அரசு மருத்துவமனை முறைகேடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்


மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஏழை மக்களின் உயிருடன் விளையாடும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் நகரில் நேற்று (17-12-2010) அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பகல் 2 மணிக்கு மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டத் தலைவர் யூசுப் அலீ தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே.ஏ. செய்யது அலீ, பொருளாளர் எஸ்.எம். ஷாகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா கண்டன உரை நிகழ்த்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலப்பாளையம் நகரத் தலைவர் ரோஷன், செயலாளர் சிராஜ், பொருளாளர் நிவாஸ், துணைத் தலைவர் அஷ்ரப், துணைச் செயலாளர் ஞானியார் உட்பட ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். தவறு செய்யும் மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன

Wednesday 8 December 2010

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு கண்டனப் போராட்டம் தேதி மாற்றம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாபர் மஸ்ஜித் தீர்ப்பை கண்டித்து ஜனவரி 4 ல்அறிவித்திருந்த கண்டனப் போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் ஜனவரி 27 ல் சென்னை மற்றும் மதுரையில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Tuesday 7 December 2010

துபையில் நடைபெற்ற தவ்ஹீத் எழுச்சி மாநாடு



கடந்த 03.12.10 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலத்தின் சார்பாக தவ்ஹீத் எழுச்சி மாநாடு ஷேய்கா ஹின்த் பின்த் அல்மக்தூம் ஸ்போர்ட்ஸ் ஹாலில் நடைபெற்றது.

மஃரிப் தொழுகைக்குப் பின் தொடங்கிய இம்மாநாட்டில் கலந்து கொண்ட மக்களின் கூட்டம் துபாயில் தவ்ஹீதின் எழுச்சியை பறைசாற்றும் முகமாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

துபாய் மண்டலத் தலைவர் முஹம்மது நாஸிர் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் தலைமையில், மண்டல நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்ற இம்மாநாட்டில் சிறப்புப் பேச்சாளர்களாக யுஏயி மண்டல ஒருங்கிணைப்பாளர் சகோ.ஹாமீன் இபுறாஹீம் அவர்கள் ‘தடம்புரளாத தவ்ஹீத் ஜமாஅத் அன்றும் இன்றும்‘ என்ற தலைப்பில் தவ்ஹீத் கொள்கையில் தடம்புரளாமல் அன்றிலிருந்து இன்று வரை ‘தவ்ஹீத் ஜமாஅத்’ மட்டுமே நிற்கிறது என்பதை மக்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.

தாயகத்திலிருந்து இம்மாநாட்டிற்காக வருகை தந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் மௌலவி. ஷம்சுல் லுஹா ரஹ்மானி அவர்கள் ‘வஞ்சிக்கப்பட்டோரின் கோரிக்கைகள்’ என்ற தலைப்பில் இந்திய நாட்டில் இஸ்லாமிய சமுதாயம் நடத்தப்படுகின்ற முறையையும் அதில் ஒரு பகுதிதான் பாபர் மஸ்ஜித் இடிப்பு.அதை மீட்க வேண்டிய கடமை ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் உள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்தினார்கள்.

இம்மாநாட்டிற்குஅபுதாபி,அல்அய்ன்,அஜ்மான்,ராஸல்  கைமா,ஃபுஜைரா,ஷார்ஜா, துபாய் ஆகிய மண்டலங்களிலிருந்து கொள்கைச் சகோதரர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

மண்டலச் செயலாளர் அபுதாஹிர் மற்றும் திருச்சி ஹுஸைன் அவர்கள் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பாக களப்பணி ஆற்றினார்கள்.
இறுதியில் மண்டலச் செயலாளர் அபுதாஹிர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள். பிறகு துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

Tuesday 30 November 2010

மேலப்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 28-11-2010 அன்று இலவக கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லஹா அவர்கள் முகாமை துவக்கி வைத்தார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு பயடைந்தனர்

நெல்லை மாவட்டப் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டப் பொதுக்குழு கூட்டம் கடந்த 28-11-2010 அன்று சங்கரன்கோவில் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இதில் மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா அவர்கள் தலைமை தாங்கினார்கள். மேலாண்மைக்குழு உறுப்பினர் சைபுல்லாஹ் காஜா அவர்கள் மேற்பார்வையாளாராக கலந்து கொண்டார்கள். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பாபர் மஸ்ஜித் தீர்ப்பு பற்றியும் ஜனவரி 27 போராட்டம் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.

வாரந்திர குர் ஆன் வகுப்பு



28 .11 .2010  அன்று  மஸ்ஜிதூர்  ரஹ்மானில்  வாரந்திர குர் ஆன் வகுப்பு நடைப் பெற்றது.  இதில்  TNTJ  மேலான்மை குழு  உறுப்பினர் சகோதரர் .அப்பாஸ்  அலி  M.I Sc அவர்கள்  உரையாற்றினார்கள்   ..

Sunday 28 November 2010

இஸ்லாமிய சொற்பொழிவு





27 .11 .2010 சனிக்கிழமை அன்று வாரந்திர   இஸ்லாமிய சொற்பொழிவு ௦ காஜா  நாயகம்  தெருவில் நடைபெற்றது .இதில்  TNTJ மேலாண்மை குழுத் தலைவர்
எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி  அவர்கள்
  "நாங்கள்  சொல்வது  என்ன?"  என்ற  தலைப்பிலும் ,
சகோதரர்  அப்துல்  கரீம்  M.I.Sc  அவர்கள் 
 "நபி  வழியே  நம்  வழி!"  என்ற  தலைப்பிலும்  உரை  ஆற்றினார்கள் .பல்வேறு  எதிர்ப்புகளுக்கு  
இடையில்  நடைபெற்ற இந்த  கூட்டத்தில்  அதிகமானோர்  பங்கு  பெற்றனர்

Monday 22 November 2010

அநீதிக்கு மேல் அநீதி.. அநீதியைத் தட்டிக் கேட்க ஜனவரி 4ல் ஆர்த்தெழுவோம்!

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது முதல் அதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் பாபர் மஸ்ஜிதை இடித்த பாவிகளை சட்டத் தின்படி தண்டிக்க வலியுறுத்தியும் நாம் உள்பட பல்வேறு இயக்கங்கள் டிசம்பர் ஆறாம் நாளில் போராட்டங்களை விடாமல் நடத்தி வந்தோம். நீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்கக் கோரி நாம் நடத்திய அனைத்து போராட்டங்களையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அர்த்தமற்றதாக்கி விட்டது.
சொத்துரிமைக்கும், மத உரிமைக்கும் விரோதமாக அமைந்த தீர்ப்பு உலக மக்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றமும் நியாயப் படுத்தப்பட்டு விட்டது. ஆரம்பம் முதலே அங்கே கோவில்தான் இருந்தது என்ற தவறான தீர்ப்பின் மூலம் பாபர் பள்ளிவாசலை யாரும் இடிக்கவில்லை என்ற தவறான நிலையை ஏற்படுத்தி விட்டது.
நீதிமன்றங்கள் மீது நாம் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கை கேள்விக்குறியாகி விட்டது. எனவே இனி நீதிமன்றங்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம்தான் எதிர் காலத்தில் முஸ்லிம்களின் உரிமையைக் காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டு விட்டனர். நீதிமன்றத் தீர்ப்புகள் விமர்சனத்திற்கு உட்பட்டவை என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. டிசம்பர் 6 அன்று போராட்டம் நடத்துவதை விட இன்ஷா அல்லாஹ் ஜனவரி 4ம் தேதியன்று சென்னையிலும் மதுரையிலும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் அந்தத் தீர்ப்பை ஆட்சேபணை செய்யும் வகையில் ஆர்ப்பரித்து எழ தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து முஸ்லிம்களையும் அழைக்கிறது.
வெள்ளையன் ஆட்சியில்
பாபர் மஸ்ஜித் பிரச்சினையில் ஆள்வோரும் அதிகார வர்க்கமும் முஸ்லிம்களுக்குத் தொடர்ந்து துரோகம் செய்து வந்ததை முஸ்லிம் சமுதாயம் தெளிவாகப் புரிந்துவைத்துள்ளது.
ஆனால் அரசியல்வாதிகளையும், அதிகார வர்க்கத்தையும் மிஞ்சும் வகையில் நீதிமன்றங்களும் தவறு இழைக்கும் என முஸ்லிம் சமுதாயம் அறிந்து கொள்ளவில்லை.
நீதிமன்றங்களின் தீர்ப்புகளை விமர்சிக்கக் கூடாது என்ற அறியாமை காரணமாகவும்,  நீதி மன்றத்தின் தீர்ப்பை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வோம் என்று சில முஸ்லிம் இயக்கங்கள் பிரச்சாரம் செய்ததன் காரணமாகவும் நீதி மன்றங்களின் நியாயங்கள் முஸ்லிம் சமுதாயத்துக்குச் சென்றடையவே இல்லை.
நீதிமன்றங்கள் இப்போதுதான் முதன் முதலில் தவறாகத் தீர்ப்பளித்து விட்டது போலவும், அதற்கு முன்பு நீதிமன்றங்கள் சட்டத்திற்கு உட்பட்டு நேர்மையான முறையில் நடந்து கொண்டது போலவும் என்ற மாயத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் உண்மை என்ன? பாபர் மஸ்ஜித் தொடர்பான வழக்குகள் அனைத்திலும் ஒவ்வொரு கட்டத்திலும் நீதிமன்றங்கள் மத உரிமை, உணர்வு ஆகியவைகளுக்கு விரோத மாகத்தான் தீர்ப்பு வழங்கி வந்துள்ளன.
நீதிமன்றங்கள் எத்தகைய தவறான தீர்ப்புகளை வழங்கினாலும் ஏமாந்த முஸ்லிம் சமுதாயம் அதைக் கண்டு கொள்ளாது என்று நீதி மன்றங்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே இந்த விபரீதங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.
நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் விமர்சனத்துக்கு உட்பட்டவை தான்; அவை அநீதி இழைக்குமானால் அவை கண்டனத்திற்குரியவைதான் என்று தெள்ளத் தெளிவாக உணர்த்தினால்தான் எதிர் காலத்தில் மதவெறி பிடித்து சட்டத்தை மீறும் நீதித்துறைக்கு எச்சரிக்கையாக அமையும்.
இதற்காகத்தான் ஜனவரி 4ம் தேதியன்று நீதிமன்றத்தின் நியாயமற்ற தீர்ப்புக்கு எதிராக ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ய உங்களை அழைக்கிறோம்.
உரிமை காத்த வெள்ளையர்கள்!
பாபர் மஸ்ஜித் குறித்து நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் வெள்ளையர் ஆட்சியி லும் வழக்குகள் தொடரப்பட்டன. முதல் வழக்கு
மகந்த் ரகுபர் தாஸ் என்பவர் 61/280/1885 என்ற வழக்கு தொடுத்தார். பாபர் மஸ்ஜிதுக்கு அல்லது அதைச் சுற்றியுள்ள சொத்துகளுக்கு உரிமை கோரி அந்த வழக்கு தொடரப்பட வில்லை. பாபர் மஸ்ஜித்துக்குச் சொந்தமான காலி இடத்தில் ராமர் பாதம் உள்ளது. அந்த இடத்தில் பக்தர்கள் வெயிலிலும், மழையிலும் நின்று கஷ்டப்படுகிறார்கள். எனவே அந்த இடத்தில் மேற்கூரை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அந்த வழக்கு.
அந்த வழக்கில் கோரப்பட்ட இடம் 21 X 17 = 357 சதுர அடி. பாபர் மஸ்ஜிதைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தில் வழக்குத் தொடுத்தவர் சொந்தம் கொண்டாடியது 357 சதுர அடிதான். ஒரு செண்டுக்கும் குறைவான இடத்தின் மீது கட்டடம் கட்டத்தான் அனுமதி கேட்டு வழக்கு போடப்பட்டது.
அப்போது பைஸாபாத் நீதிபதியாக இருந்த பண்டிட் ஹரி கிருஷ்ணன் இந்த வழக்கில் பிப். 27, 1885ல் தீர்ப்பு அளித்தார்.
அந்த இடம் (357 சதுர அடி) வழக்குத் தொடுத்தவருக்குச் சொந்தமானது என்றாலும் அங்கே பள்ளிவாசல் இருந்து வருவதால் கோவில் கட்ட அனுமதிக்க முடியாது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பது அவரது தீர்ப்பு. மேல் முறையீடு
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மகந்த் ரகுபர் தாஸ் மேல் முறையீடு செய்தார். அப்போது பைஸாபாத் மாவட்ட நீதிபதியாக எஃப்.இ.ஏ. சேமியர் இருந்தார். இவர் சம்பந்தப்பட்ட இடத்தை நேரடியாக ஆய்வு செய்து விட்டு 1886 மார்ச் 18ல் தீர்ப்பளித்தார்.
அந்த இடம் ரகுபர் தாசுக்குச் சொந்தமானது அல்ல என்று தீர்ப்பளித்ததுடன் 357 சதுர அடியில் கோவில் எழுப்பவும் தடை விதித்தார்.
இரண்டாம் மேல் முறையீடு
இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து மகந்த் ரகுபர் தாஸ் மேல் முறையீடு செய்தார். நீதிபதி டபிள்யூ. யங்க் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆவணங்களின்படியும், சட்டப்படியும் அந்த 357 சதுர அடி நிலம் தனக்குச் சொந்த மானது என்பதற்கு மகந்த் ரகுபர் தாஸ் தக்க ஆதாரம் எதையும் காட்டவில்லை எனக் கூறி அந்த வழக்கை 1886 நவம்பர் 1ல் தள்ளுபடி செய்தார்.
வெள்ளையர்கள் ஆட்சியில் வெறும் 357 சதுர அடி நிலத்திற்குக் கூட இந்துக்களுக்குச் சட்டப்படி உரிமை இல்லை என்று தெளிவாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டு முழு இடமும் முஸ்லிம்களுக்கே சொந்தமானது என்று சட்டப்படி தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது.
சுதந்திர இந்தியாவில் காவி நீதிமான்கள்!
ஆனால் நாடு விடுதலை அடைந்த பின்னர் நாட்டு விடுதலைக்கு அதிகமதிகம் பாடுபட்ட மக்களுக்கு ஆள்வோரை மிஞ்சும் வகையில் நீதிமன்றங்கள் தொடர்ந்து அநீதியை இழைத்து வந்தன. அந்த வரலாறுகளையும், முஸ்லிம்கள் அறிந்து கொள்வது அவசியமாகும்.
நீதிமன்ற அநீதி – 1
1949 டிசம்பர் 22ம் தேதி இரவோடு இரவாக பாபர் பள்ளியில் ராமர், சீதை, லட்சுமணன் சிலைகளைக் கொண்டு போய் வைத்த சமூக விரோதிகள் பிரச்சினையை ஆரம்பித்து வைத்தனர்.
ஒரு விநாடியில் அதைத் தூக்கி வெளியே போடுவது தான் சட்டப்படி செய்ய வேண்டிய காரியம் என்ற போதும் நீதிபதி அந்தஸ்தில் உள்ள கே.கே நய்யார் அதை அப்புறப்படுத்த மறுத்து உத்தரவிட்டார். நீதியின் பெயரால் நடந்த முதல் அநீதி இது. இந்த நீதிபதி பின்னாளில் ஜனசங்கம் என்ற சங்பரிவார இயக்கத் தில் சேர்ந்தார்.
நீதிமன்ற அநீதி – 2
சிலைகளை அப்புறப்படுத்தக் கோரியும், அந்த இடத்தை முஸ்லிம்கள் வசம் ஒப்படைக்கக் கோரியும் முஸ்லிம்கள் வழக்குத் தொடுத்தனர். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிமன்றம் சிலைகளைக் காப்பாற்ற ரிஸீவரை நியமித்து தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது. இது இரண்டாவது அநீதியாகும்.
நீதிமன்ற அநீதி – 3
1950 ஜனவரி 16 அன்று சிலைகளை அகற்றக் கூடாது என்று கோரி கோபால் சிங் விஷாரத் பைஸாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது கோரிக்கையை ஏற்று சிலைகளை அகற்றக் கூடாது என்று இடைக்கால உறுத்துக் கட்டளை உத்தரவு பிறக்கப்பட்டு மூன்றாவது அநீதி அரங்கேற்றப்பட்டது.
நீதிமன்ற அநீதி – 4
மகந்த் பரமஹம்ஸ ராமச்சந்திர தாஸ் என்பவர் பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்ட சிலைகளுக்குப் பூஜை செய்ய அனுமதி கேட்டு வழக்குத் தொடுக்கிறார். 1950 டிசம்பர் 5ல் இதற்கு அனுமதிக்கப்படுகிறது. அதாவது சட்ட விரோதமாக பள்ளிவாசலுக்குள் சிலையை வைத்து விட்டு அந்தச் சிலைகளுக்கு பூஜை செய்ய அனுமதித்ததற்கு மதவெறி தவிர வேறு சட்டக் காரணம் ஏதுமில்லை. இது காவி நீதிமான்கள் செய்த நான்காவது அநீதியாகும்.
நீதிமன்ற அநீதி – 5
இந்த வழக்கில் நிர்மோகி அகாரா என்ற அமைப்பு தன்னையும் நுழைத்துக் கொண்டது. முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் வகையில் அது வழக்கு தொடுத்தபோது எடுத்த எடுப்பிலேயே அதைத் தள்ளுபடி செய்ய வேண்டிய நீதிபதிகள் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதன் மூலம் ஐந்தாவது அநீதியை அரங்கேற்றினர். பாபர் பள்ளிவாசல் என்ற ஒன்று இல்லை; அது ஆரம்பம் முதல் எங்களிடம்தான் உள்ளது. கோவிலாகத்தான் இருந்து வருகிறது. பாபர் இடிக்கவும் இல்லை; மசூதி கட்டப்படவும் இல்லை. அது கோவிலாகத்தான் இருக்கிறது; இதில் முஸ்லிம்கள் இடையூறு செய்யக் கூடாது என்பதுதான் அந்த வழக்கு.
1950  டிசம்பர் 17ல் இந்த வழக்கு தொடரப் பட்டது. உண்மைக்கு மாறான இந்த வழக்கை எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்யாமல் இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அநீதியை நிலை நாட்டியது. (இந்த அமைப்புக்குத்தான் மூன்றில் ஒரு பங்கு என்று அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது)
முஸ்லிம்கள் தரப்பிலும், வக்ஃபு வாரியத் தின் தரப்பிலும், இந்துக்கள் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு உ.பி. அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படை யில் அலஹாபாத் உயர் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. கீழமை நீதிபதிகளிடம் இருக்கும் அளவுக்கு மதவெறி மேல் நீதிமன்ற நீதிபதிகளிடம் இருக்காது என்று முஸ்லிம்கள் குருட்டு நம்பிக்கை வைத்திருந்தனர். அதிலும் தோல்விதான்.
நீதிமன்ற அநீதி – 6
ஒரு இடம் யாருக்குச் சொந்தம் என்பதை முடிவு செய்வதற்கு அந்த இடத்தை அகழ்வா ராய்ச்சி செய்யுமாறு சட்டத்தில் கூறப்பட வில்லை. உலகத்தில் எந்த நாட்டிலும் இத்தகைய சட்டம் இல்லை. ஆனால் நீதிபதிகள் சட்ட விரோதமாக அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்யுமாறு உத்தரவிட்டனர்.
நீதிமன்ற அநீதி – 7
இந்த வழக்கை வக்ஃபு வாரியம் – பாபர் மஸ்ஜித் கமிட்டி, நிர்மோகி அகாரா என்ற அமைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் புதிதாக யாரும் சட்டப்படி உரிமை கோர முடியாது. ஆனால் பார்ப்பன சங்பரிவாரக் கும்பல் உலகமே காரித்துப்பும் வகையிலான கேவலமான செயல் மூலம் மேலும் சிலரை வழக்கில் நுழைத்தது. இதுதான் நடந்த அநியாயத்திலேயே மிகப் பெரியது.
ஒரு சொத்து சம்பந்தமாக வழக்குப் போடுவதாக இருந்தால் அந்தச் சொத்தில் விவகாரம் ஏற்பட்டு 12 ஆண்டுக ளுக்குள் வழக்குப் போட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இந்தச் சட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மைனர்களுக்கும், மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும் விலக்கு உண்டு.
ஒரு மைனரின் சொத்தை ஒருவர் அபகரித்துக் கொண்டால் அவர் 12 ஆண்டுகள் கழித்த பின்பும் வழக்குப் போடலாம். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் இந்தச் சொத்து குழந்தை ராமருக்கு உரியது. குழந்தை ராமர் காலாகாலம் மைனராவார். எனவே ராமர் என்றும் மைனராக உள்ளதால் அவர் எப்போது வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம்.
மைனர் நேரடியாக வழக்குத் தொடர முடியாது என்பதால் அவர் சார்பில் அவரது கார்டியன் வழக்குத் தொடரலாம் என்று வாதிட்டு ராமர் பெயரில் வழக்கு தொடரப்பட்டது.
அதாவது எனக்குச் சொந்தமான இடத்தில் பாபர் என்பவர் 450 ஆண்டுகளுக்கு முன் கோவிலைக் கட்டினார். இதற்கு நீதி வழங்க வேண்டும் என்பதுதான் வழக்கு.
ராமர் பிறந்த இடம் மக்களால் வழிபாடு நடத்தப்படுகிறது என்றும் அது மனித அந்தஸ்தை அடைந்து விட்டது என்றும் அந்த மைனரும் வழக்குத் தொடரலாம் என்றும் வாதிட்டு அதன் காப்பாளர் என்ற பெயரில் 1989ல் வழக்குப் போட்டு தங்களையும் வழக் கில் சேர்க்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. தியோகி நந்தன் அகர்வால் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர்தான் இந்த வழக்கைத் தொடர்ந்தவர். அதாவது மைனரான ராமர் சார்பிலும், மைனரான காவி இடம் சார்பிலும் அதன் பாதுகாவலர் என்ற பெயரில் இவர் வழக்கில் சேர்க்கப்பட்டார்.
உலக மக்கள் இதை அறிந்தால் இந்நீதித்துறையைப் பற்றி என்ன நினைப்பார்கள். காரித்துப்புவார்களே என்ற குறைந்த பட்ச கூச்சம் இன்றி குழந்தை ராமரும், மைனர், காலி மனையும் வழக்கில் சேர்க்கப்பட்ட அதிசயம் நடந்தது.
உலக நீதிமன்ற வரலாற்றில் இதுபோன்று நீதிமன்றங்கள் செயல்பட்டிருக்காது. ஆயினும் உள்ளார்ந்த மத உணர்வின் காரணமாக இவர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
இந்தக் கோமாளித்தனத்தின் அடிப்படையில்தான் மைனர் ராமருக்கு மூன்றில் ஒரு பங்கு என்று தீர்ப்பளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற அநீதி – 8
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடிப்படை இல்லாமலும், உள்நோக்கத்துடனும் அகழ்வாராய்ச்சிக்கு உத்தரவிட்டதன் மூலமும், ராமரை வாதியாக ஆக்கியதன் மூலமும் இப்போதைய தீர்ப்புக்கு அடித்தளம் அமைத்தனர்.
அதன் அடிப்படையில் மைனர் ராமருக்கு மூன்றில் ஒரு பங்கு, நிர்மோகி அகாராவுக்கு மூன்றில் ஒன்று, முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒன்று எனத் தீர்ப்பளித்து மாபெரும் அநீதியை இழைத்தனர்.
அதாவது இல்லாத ராமரை வழக்கில் சேர்த்து அவரையும் அடுத்தவர் சொத்துக்கு பங்காளியாக்கி விட்டனர்.
பள்ளிவாசலே அங்கே இருக்கவில்லை. பாபர் மசூதியை இடிக்கவும் இல்லை. இது கோவிலாகத்தான் இருக்கிறது என்ற புளுகு மூட்டையை அப்படியே நம்பி அவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு, பள்ளிவாசலின் உரிமையாளர்களுக்கு மூன்றில் ஒன்று. இப்படி அநியாயத் தீர்ப்பளித்த அத்தனை பேரையும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் தாட்சண்ய மின்றி கண்டிக்கிறது!
நீதிமன்ற அநீதி – 9
அகழ்வாராய்ச்சி அறிக்கையில் கோவில் இடிக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டதாகக் கூறப்படாத போதும் கோவிலை இடித்து விட்டு பாபர் பள்ளிவாசலைக் கட்டினார் என்ற அவதூறை நீதிமன்றம் கூறியது ஏற்புடைய தில்லை.
நீதிமன்ற அநீதி – 10
அகழ்வாராய்ச்சியில் விலங்குகளின் எலும் புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட பின்பும் அது கோவிலாக இருந்திருக்க முடியாது என்பது இதன் மூலம் நிரூபணமான பின்பும் அது கோவில்தான் என்று கூறியதன் மூலம் பத்தா வாது அநீதி அரங்கேற்றப்பட்டது.
நீதிமன்ற அநீதி – 11
எந்த இடத்தில் பள்ளிவாசலின் மையப்பகுதி இருந்ததோ அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார். எனவே அது அவருக்குத்தான் சொந்தமானது என்றும் இந்த நீதிபதிகள் தவறாக தீர்ப்பளித்து விட்டனர். 18 லட்சம் ஆண்டுக்கு முன்னால் ஒருவர் இந்த இடத்தில் பிறந்தார் என்று ஒருவன் கூறினால் அதை சிந்தனையுள்ள எவரும் ஏற்க முடியாது.
நீதிமன்ற அநீதி – 12
பாபர் பள்ளிவாசல் இஸ்லாமியச் சட்டப்படி பள்ளிவாசலே அல்ல என்று கூறிய நீதிபதி நீதி வழங்குவதில் தவறி விட்டார். இப்படி அடுக்கடுக்கான அநீதிகளைத்தான் நீதிபதிகள் பாபர் மஸ்ஜித் வழக்கில் தொடர்ந்து கடைப்பிடித்து வந்துள்ளனர். எனவே இது போன்ற அநீதிகளை அம்பலப்படுத்தி நீதித்துறையை தட்டிக் கேட்கத் தவறினால் நம்முடைய பள்ளிவாசல்கள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்படும். நீதி வழங்குவதில் தவறிய நீதிபதிகளைத் துணிவுடன் கண்டிக்கவும், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தானாக மறு விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தியும், எந்தப் பள்ளிவாசல் பிரச்சினையையும் நீதி மன்றத்துக்குக் கொண்டு செல்ல பயப்படும் நிலைமை இனியும் நீதிமன்றங்களால் ஏற்படக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்தவும்,
இருக்கின்ற பள்ளிவாசல்கள் இதுபோன்று நீதித்துறையால் பறிக்கப்படாமல் இருக்க நம் முழு பலத்தையும் திரட்டி கண்டனங்களைப் பதிவு செய்வோம்.
நீதித்துறை சட்டத்தை மீறினால் நீதிமன்றங்களையும் கண்டிக்க தயங்க மாட்டோம் என்பதை உலகறியச் செய்வோம். ஜனவரி 27ல் நம் உணர்வை வெளிப்படுத்துவோம்

Sunday 21 November 2010

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில்  இன்று (18-11-2010) ஹஜ் பெருநாள்  திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் பெருநாள் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர்  இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.


Thursday 11 November 2010

TNTJ சார்பாக ஹஜ்பெருநாள் தொழுகை நடைபெறும் ஊர் மற்றும் இடங்களின் பட்டியல்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெறும் ஹஜ் பெருநாள் தொழுகை பட்டியல்:













Thursday 4 November 2010

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)

அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர!  ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள்.
அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்!  ஏன்? அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான்.
இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக!)” என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 2:124)
அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை சோதித்ததாகக் கூறுகின்றானே! அந்தச் சோதனைகள் என்ன?
தனிமை!
இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகளில் மிகப் பெரிய சோதனை அவர்கள் சமுதாயத்தை விட்டு தனிமைப் படுத்தப் பட்டது தான்.  ஒரு மனிதனை ஊரெல்லாம் வெறுத்து ஒதுக்கும் போது சொந்த வீட்டில் அரவணைப்பும் அன்புப் பிணைப்பும் இருந்தால் அந்தத் தனிமையை அவர் ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும்.  ஆனால் இந்த ஏகத்துவ பெருந்தலைவரை பெற்ற தந்தையே எதிர்க்கும் போது அவர்களது நிலை எப்படி இருந்திருக்கும்? வீட்டில் எதிர்ப்பு! ஊரில் எதிர்ப்பு! சமுதயாம் எதிர்ப்பு! அரசாங்கம் எதிர்ப்பு!  ஆனால் இதையெல்லாம் வகை வைக்காது இந்தப் பெருந்தகை தனது கொள்கையில் உறுதியாக நிற்கின்றார்.
இந்தக் கொள்கையில் நெருப்பாய் இருந்து, சிலைகளைத் தகர்த்தெறிந்ததால் நெருப்பில் தூக்கி எறியப்படுகின்றார். (பார்க்க அல்குர்ஆன் 21:51-70)
இந்த இரண்டும் பொது வாழ்வில் இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகள்!
இந்தக் கொள்கைக்காக நாட்டைத் துறந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன்29:26)
நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கின்றார்கள்.
பின்னர் குழந்தை பிறந்து, அதன் முகம் பார்த்து அகமகிழ கொஞ்சும் வேளையில் மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் தண்ணீரில்லாத பாலைவெளியில் கொண்டு போய் விட வேண்டும் என்ற அல்லாஹ்வின் உத்தரவை ஏற்று அவ்வாறே அங்கு கொண்டு போய் விடுகின்றார்கள்.
குழந்தை இளவலாகி அவர்களுடன் நடை போடும் வயதை அடைந்ததும் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அக்குழந்தையை அறுக்க முன் வந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன் 37:99-107)
இவை அனைத்தும் அவர்களது சொந்த வாழ்க்கையில் அல்லாஹ் வைத்த சோதனைகள்!  இந்த எல்லாச் சோதனைகளிலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் வென்றார்கள்.
அதனால் தான் அவர்களை இமாமாக ஆக்கியது மட்டுமல்லாமல் அவர்களை அல்லாஹ் தன் நண்பராகவும் ஆக்கினான்.
தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான். (அல்குர்ஆன் 4:125)
இன்றைக்கு ஹாஜிகள் மக்காவில் செய்யும் பெரும்பான்மையான வணக்கங்களும், ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி நாம் செய்கின்ற குர்பானி எனும் வணக்கமும் அவர்களின் தியாகத்தின் வெளிப்பாடு தான்.  அந்த அளவுக்கு அல்லாஹ் அவர்களை நமக்கு இமாமாக ஆக்கி வைத்து, அவர்களை – அவர்களது கொள்கைகளை எதிர்த்த மக்களை வேரறுத்து விட்டான்.  இதனால் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு கூறுகின்றான்.
“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
நபி (ஸல்) அவர்கள் முதல் அவர்களது உம்மத்தினர் அனைவருக்கும் இப்ராஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் முன்மாதிரியாக ஆக்கி வைத்தான்.
“உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்கு மிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடு வேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை)       (அல்குர்ஆன் 60:4)
இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே.
அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர். (அல்குர்ஆன் 9:114)
இணை வைப்பவர்களிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் கடைப்பிடித்த அந்தக் கடுமையான அணுகுமுறையை அல்லாஹ் அழகிய முன்மாதிரி என்று கூறுகின்றான்.  ஆனால் இன்று ஏகத்துவவாதிகள் எனப்படுவோர், இணை வைப்பவர்களிடம் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதில்லை.  முஸ்லிம் இணைவைப்பாளர்கள், காஃபிர் இணைவைப்பாளர்கள் என்று இரு கூறாகப் பிரித்துப் பார்க்கின்றனர்.  முஸ்லிம் இணைவைப்பாளர்களை திருமணம் முடிக்கலாம், அவர்களுக்குப் பின்னால் நின்று தொழலாம் என்றெல்லாம் கூறுகின்றார்கள்.
இதற்கு நம்மவர்கள் கூறும் சாக்கும் சமாதானமும், அவர்கள் ஹிதாயத்துக்கு – நேர்வழிக்கு வந்து விடலாம் என்ற வாதம் தான்.
தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான்.
அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.  (அல்குர்ஆன் 18:28)
மக்கத்து முஷ்ரிக்குகளின் பிரமுகர்கள் இஸ்லாத்திற்கு வந்து எப்படியேனும் இஸ்லாத்திற்கு வந்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க நினைக்கின்றார்கள்.  ஆனால் அல்லாஹ் இந்தச் செயலை கண்டிக்கின்றான்.  இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது தான் சரியான செயல் என்று கூறுகின்றான்.
இதே போல் மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் கண்டிக்கின்றான்.
அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார்.  எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார்.  அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இணை வைப்பவர்களில் முக்கியப் பிரமுகர் ஒருவர் இருந்தார்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பார்வையற்ற தோழரைப் புறக்கணித்து விட்டு, முக்கியப் பிரமுகரின் பால் கவனம் செலுத்தினார்கள்.  “நான் கூறுவதில் தவறு ஏதும் காண்கிறாயா?” என்று அந்தப் பிரமுகரிடம் நபியவர்கள் கேட்க, அவர் இல்லை என்று கூறினார்.  அப்போது தான் அல்குர்ஆன் 80வது அத்தியாயம் 1 முதல் பத்து வரையிலான வசனங்கள் அருளப்பட்டன.
ஆதாரம் : திர்மிதி – 3452, 3328, முஸ்னத் அபூயஃலா – 4848

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.  (அல்குர்ஆன் )
நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களின் பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது, அவர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து விட வேண்டும் என்பதற்காகத் தான்.
ஹிதாயத்துக்கு வந்து விடுவார்களே என்ற எதிர்பார்ப்பு தான் நபி (ஸல்) அவர்களுக்கும் ஏற்பட்டது.  ஆனால் இறைவன் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.  இப்போது இஸ்லாத்தில் இருப்பவர்களுக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப் பட வேண்டுமே தவிர, முஷ்ரிக்காக இருப்பவர் இஸ்லாத்திற்கு வந்து விடுவார் என்று நினைத்து அவருக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கூறுகின்றான்.
ஆனால் இதை நமது சகோதரர்கள் விளங்கிக் கொள்ளவில்லை.  இணை வைப்பில் மூர்க்கமாக நின்று பிரச்சாரம் செய்பவர்களிடம் கூட பெண் எடுக்கத் தயங்குவதில்லை.  இது போன்று இன்ன பிற விஷயங்களிலும் இந்த ஹிதாயத் வாதத்தின் அடிப்படையிலேயே இணை வைப்பவர்களிடம் நெருக்கத்தை வைத்திருக்கின்றனர்.
இதற்கெல்லாம் காரணம், இப்ராஹீம் (அலை) என்ற இமாமை முழுமையாகப் பின்பற்றாதது தான்.  அல்லாஹ் கூறும் அந்த அழகிய முன்மாதிரியைப் புறக்கணித்தது தான்.
அதற்காக இணை வைப்பவர்களிடம் எப்போதும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் கூறவில்லை.  மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான்.அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்.   (அல்குர்ஆன் 60:8,9)
இந்த வசனங்களின் படி மார்க்க விஷயங்களில் நம்முடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காதவர்களுடன் பழகுவதோ அல்லது அவர்களுக்கு நன்மை செய்வதோ தவறில்லை.  ஆனால் அவர்களும் இணை வைப்பாளர்கள் என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து விட மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Sunday 31 October 2010

மேலப்பாளையத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்


30.10.2010 சனிக்கிழமை அன்று மேலப்பாளையம் பஜார் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலைப்பாளையம் கிளை சார்பாக பாபரி மஸ்ஜித் தீர்ப்புக்கு பின் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஏ. செய்யது அலீ தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பேச்சாளர் கே.எஸ். அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி “தனித்து நிற்கும் தவ்ஹீத் ஜமாஅத்” என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சேவைகள், சமூகப் புரட்சிகள் ஆகியவற்றைப் பற்றி சிறப்புரையாற்றினார். மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி “அயோத்தியா தீர்ப்பு ஓர் அலசல்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்

Monday 25 October 2010

பெண்கள் பயான்

 கடந்த (17-10-2010) அன்று  16, அத்தியடி  கீழ  தெருவில்  பெண்கள்  பயான்  நடைபெற்றது    .
இதில் "தொழுகையின்  அவசியம் " மற்றும் "வாக்குறுதியை  பேணுவோம்"  என்ற  தலைப்பில்  அல் -இர்ஷாத்  ஆலிமாக்கள்  உரை  ஆற்றினார்கள்   .இதில்  திரளான  பெண்கள்  கலந்துகொண்ட்னர் .இந்த  நிகழ்ச்சி  33 வார்டு  TNTJ சகோதாரர்களால்  சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்

Tuesday 19 October 2010

செங்கல்பட்டில் கூடிய TNTJ வின் மாநில செயற்குழு!

17.10.2010 அன்று இறையருளால் செங்கல் பட்டு ஷஃபா மர்வா மஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 

1. கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று அலகாபாத் நீதிமன்றம் 60 ஆண்டுகாலமாக நிலுவையில் இருந்த பாபர் மஸ்ஜித் தொடர்பான தனது தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் மீழ முடியாத அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் ஆழ்த்தியிருக்கின்றது. அது இந்திய நாட்டின் அரசியல் சட்ட வரம்புகளைத் தாண்டி, இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கைக்கு முரணாக அளிக்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களின் வாழ்வுரிமையான வழிபாட்டு உரிமையை பறித்துள்ளது. இந்தத் தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பானது.
முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் அக்கிரமும் ஆகும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்துகளை பதிவு செய்து தங்களுடைய கடுமையான ஆட்சேபணைகளையும் கண்டணங்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்த தீர்ப்பை தங்களுடைய நீதிமன்ற அனுபவம், அறிவு ஞானம் எனும் உலைக்கூடத்தில் இராசயனப் பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்கள் வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது
1992 டிசம்பர் 6ந்தேதி அன்று இந்துத்துவா சங்கபரிவார வன்முறைக்கும்பல் பாபர் மஸ்ஜிதை அக்கிரமமாக இடித்து தரைமட்டமாக்கி தகர்த்தெரிந்தது.. இந்த அக்கிரம செயலை நீதிமன்றம் கண்டு கொள்ளாததுடன் அதைக் கண்டிக்காமலும் விட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பான கோரச் செயலை மன்னித்து அச்செயலை புனிமாக்கியுள்ளது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்னர் 1993 ஐனவரி 7ம் தேதி அன்று குடியரசுத் தலைவர் ஆணைப்படி பாபரி மஸ்ஜிதை சுற்றி அமைந்துள்ளநிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது. பின்னர் அதை நாடாளு மன்றத்தில் சட்டமாகக் கொண்டு வந்தது..
அந்தச் சட்டத்தின் விதி எண் : 4 உட்பிரிவு (3) பாபரி மஸ்ஜித் தொடர்பான அனைத்து உரிமையியல் வழக்குகளை செல்லாதது என்று அறிவித்திருந்தது.
பாபரி மஸ்ஜித் வழக்கு குறித்து குடியரசுத் தலைவர் கேட்டிருந்த கருத்திற்கு உச்ச நீதிமன்றம் அக்டோபர் 24, 1994ல் அளித்த தீர்ப்பில் இந்த பிரிவை ரத்து செய்தது. அந்த தீர்ப்பின் போது முஸ்லிம்கள் சர்ச்சைக்குரிய நிலத்தை 1528 லிருந்து 400 ஆண்டுகாலமாக அனுபவித்து வந்துள்ளனர். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய எதிரிடை அனுபவ உரிமை (Adverse possession) யை இது பாதிக்கச் செய்து பறித்து விடுவதால் இது செல்லாது என்று குறிப்பிட்டது. அதன்படி அலகாபாத் உயர் நீதிமன்றம் 30.09.2010 அன்று அளித்த இந்த தீர்ப்பு, உச்ச நீதி மன்றம் 1994 அக்டோபர் 24 அன்று அளித்த தீர்ப்பிற்கு எதிரானது.
ஒரு சொத்து குறித்த உரிமை தொடர்பான வழக்கு நீதி மன்றத்திற்கு வரும் போது அந்தச் சொத்து தனக்குச் சொந்தம் என்று நிரூபிக்க வேண்டிய பொருப்பும் கடமையும் சொத்தின் சொந்தக்காரர் மீது இல்லை. மாறாக இந்தச் சொத்திற்கு எதிராக யார் வழக்குத் தொடுக்கின்றாரோ அந்தப் பிரதிவாதியின் மீதுதான் அந்தப் பொறுப்பு இருக்கின்றது. இதுதான் இந்திய சாட்சிய சட்ட ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட 110 ன் விதியாகும். அலகாபாத் உயர்நீதிமன்றம் இதை அப்பட்டமாக மீறி உள்ளது. பாபரி மஸ்ஜிதின் உரிமையாளரும் அனுபவதாரருமான முஸ்லிம்களை வெளியில் தள்ளியதோடு மட்டுமல்லாமல் அவர்கள்தான் இந்த சொத்துக்கு உரியவர்கள் என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும் என்பதை முஸ்லிம்கள் மீது சுமத்தி அவர்களிடமிருந்து இந்தச் சொத்தை அநியாயமாகப் பறித்துள்ளது.
தொல்லியல் ஆய்வு என்பது இந்திய சாட்சிய சட்டத்தின் கீழ் உள்ளதல்ல, நீதிமன்ற வரம்பிற்கு உட்பட்டதல்ல என்பது தெரிந்தும் அதையே முழு ஆதாரமாகக் கொண்டு அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொல்லியல் ஆய்வு என்பது பாபரி மஸ்ஜித் இடிக்கப்படாத பட்சத்தில் சாத்தியமானதுமல்ல. பாபரி மஸ்ஜித் என்று ஒன்று அந்த இடத்திலேயே இல்லாதது போன்று தொல்லியல் ஆய்விற்கு உத்தரவிட்டு அதன்படியே தீர்ப்பும் அளித்தது அநியாயமும் அக்கிரமும் ஆகும். இது போன்று பாபரி மஸ்ஜித் என்றொரு கட்டிடம் இல்லாதது போன்றும் அது இடிக்கப்படாதது போன்றும் அந்த நிலத்தை மூன்று பங்காக பங்கு பிரித்திருப்பது இந்தத் தீர்ப்பின் மாபெரும் துரோகமாகும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு அப்பாற்பட்டும், இந்திய அரசின் உயிர்மூச்சான மதச்சார்பின்மைக்கு எதிராகவும் பெரும்பான்மை மதத்தினரின் மூடநம்பிக்கை, புராணம், கற்பனை அடிப்படையிலும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மதநம்பிக்கை , புராணம் ,இதிகாசம் என்ற அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் இனிமேல் இந்த அடிப்படையில் பிறமதத்தவரின் வழிபாட்டுத் தலங்கள் அல்லாமல் பிறருடைய சொத்துக்களை ஆக்கிரமிப்பதற்கும் அபகரிப்பதற்கும் இந்தத் தீர்ப்பு வழிகோலியுள்ளது. இப்படி இந்திய ஒற்றுமைக்கும் மதச் சார்பின்மைக்கும் வேட்டு வைப்பது இந்தத் தீர்ப்பின் மாபெரும் பாதக பயங்கர அம்சமாகும்.
சங்கப்பரிவாரம் இதுவரை எழுதியும் பேசியும் வந்த வசனத்தை அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பாக தந்துள்ளது. ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுவது போல் Judgment delivered justice not delivered (தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதி நியாயம் வழங்கப்படவில்லை) என்று இந்திய சட்ட வல்லுநர்கள், முன்னாள் நீதிபதிகள், முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர்கள் குறிப்பிடுகின்ற அநியாயமான இந்தத் தீர்ப்பை முஸ்லிம் சமுதாயம் ஏற்கவில்லை. இனியும் ஏற்பதில்லை என்று கூறி இந்தத் தீர்ப்பை வன்மையாக கடுமையாக இந்தச் செயற்குழு கண்டிக்கின்றது.

2. ராமர் பிறந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டியது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு நேர்மாறானது. அது பள்ளிவாசலே இல்லை என்று கூறி இஸ்லாமிய மார்க்கத்திற்கு முட்டாள் தனமான விளக்கம் கொடுத்து இந்திய அரசியல் சட்டப்படி கூட தீர்ப்பளிக்க தகுதியற்ற நீதிபதி தரம்வீர் சர்மா வை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.
3. பாபரி மஸ்ஜித் தீர்ப்பு குறித்து யாருக்கும் அஞ்சாமல் நியாயமான கருத்து தெரிவித்த முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரை இந்த செயற்குழு வெகுவாகப் பாராட்டுகின்றது.
4. இந்தத் தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மதம் கடந்து ஆர்ப்பரித்து குரல் எழுப்புகின்ற நடுநிலையாளர்கள், முன்னாள் நீதிபதிகள், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், ஊடகத் துறையினர் உட்பட அனைவருக்கும் இந்தச் செயற்குழு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
5. பாபர் மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்கு முடிவு செய்த பாபரி மஸ்ஜித் செயல்பாட்டுக் குழுவிற்கு (BMAC) இச்செயற்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
6. அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியான மாத்திரத்தில் இதை வரவேற்ற திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், சமுதாய இயக்கங்கள், குறிப்பாக இந்தத் தீர்ப்பை வரவேற்கிறோம் இது வெற்றியின் முதற்படிக்கட்டு என்று தனது முகத்திரையை கிழித்து தனது துரோகத் தனத்தை வெளிப்படுத்திய தமுமுக, மற்றும் மமக வை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.
7. பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்ற அத்வானி போன்றோர் மீது நடவடிக்கை எடுப்பதில் மென்மையான அணுகு முறை யைக் கையாண்டு வரும் மத்திய காங்கிரஸ் அரசை இச்செயற்குழு கண்டிக்கிறது. இத்தீர்ப்பிற்குப் பிறகு அவர்களை தப்புவிக்க சட்டமும் துணை போவதைக் கண்டு இச்செயற்குழு தனது வருத்தத்தை பதிவு செய்கிறது
8. காங்கிரஸ் கட்சி இழைத்த துரோகங்கள்.
துரோகம் : 1
1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22, 23 நள்ளிரவில்தான் இராமர், இலட்சுமணர், சீதை ஆகியோரின் சிலைகள் பாபரி மஸ்ஜிதின் உள்வளாகத்தில் வைக்கப்பட்டன. அப்போது மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சிதான். அந்தச் சிலைகளை உடனே அப்புறப்படுத்தி , அத்து மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததோடு மட்டுமல்லாமல் ஐவேளை தொழவிடாமல் தடுத்து நிறுத்தி பள்ளிவாசலை இழுத்து மூடிய துரோகத்தை காங்கிரஸ்தான் செய்தது. அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் இந்த அக்கிரமத்திற்கு துணைபோனது.
துரோகம் : 2
1989 ராஜீவ் காந்தி பிரதம அமைச்சராக இருக்கும் போது நாடாளுமன்ற தேர்தலுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பாக இந்துக்கள் ஓட்டுக்களை பொறுக்குவதற்காக பாபரி மஸ்ஜித் பள்ளிவாசல் அமைந்த நிலத்திற்குள் விஸ்வஹிந்து பரிஷத் குண்டர்கள் சிலா நியாஸ் என்ற பெயரில் அடிக்கல் நாட்டு வைபவத்தை நடத்துவதற்கு அனுமதிவழங்கியததான் 1992ல் பாபர் மஸ்ஜித் உடைப்பிற்கு காரணமானது. இது காங்கிரஸ் கட்சி செய்த அடுத்த துரோகமாகும்
துரோகம் : 3
1992 பாபரி பள்ளிவாசல் இடிக்கப்படப் போகின்றது என்று உளவுத் துறை தகவல் தெரிவித்தும் மாநில பிஜேபி அரசைக் கலைக்காமல் கரசேவை என்ற பெயரில் இராணுவத்தின் மேற்பார்வையில் இந்துத்துவா சக்தி கயவர்கள் பாபரி மஸ்ஜிதை இடிக்கவிட்டு வேடிக்கை பார்த்ததும் காங்கிரஸ் ஆட்சிதான்.
துரோகம் : 4
பள்ளிவாசல் இடிக்கப்பட்ட பிறகு அதே இடத்தில் தற்காலிக கோயில் கட்ட அனுமதித்ததும் காங்கிரஸ் அரசுதான்.
துரோகம் : 5
பாபர் மஸ்ஜித் இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்பது மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்னால் வெறும் சிந்தனையோட்டமாக மட்டுமே இருந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசுதான் அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதத்தில் முதன் முதலாக பள்ளியின் கீழ் கோயில் இருந்ததா? என்பதை ஆய்வு செய்வதற்காக தன் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொல்லியல் துறை மூலம் அகழ்வாராய்ச்சிக்குரிய வழிகளை ஏற்பாடு செய்தது.. அதுதான் இன்றைய இந்தத் தீர்ப்பிற்கு காரணமாக அமைந்தது. இப்படி அடுக்கடுக்காக முஸ்லிம்களுக்கு துரோகங்களுக்காக காங்கிரஸ் கட்சியை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது. .
9. தீர்ப்பு எழுதி அதன் மை காய்வதற்குள்ளாக முஸ்லிம்களுக்கென்று ஒதுக்கப்படட மூன்றில் ஒரு பங்கு இடத்தையும் தங்களுக்கு விட்டு விட வேண்டும் என்று கூறி முஸ்லிம்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகின்ற ஆர்எஸ்எஸ் விஹெச்பி பஜ்ரங்தள் பிஜேபி போன்ற இந்துத்துவா அமைப்புகளை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.
10. பாபரி மஸ்ஜித் பள்ளிவாசல் தீர்ப்பு வெளியான பிறகு பள்ளிவாசல்கள் புனிதத் தலமல்ல. அந்தப் பள்ளிவாசல்களை மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் கையகப்படுத்தி சுகாதாரம் மற்றும் சாலைப் போடுதல் போன்ற பல்வேறு வகைக்கு பயன்படுத்தலாம் என்றும் பாபர் மஸ்ஜித் கட்டப்பட்ட இடம் இராமர் பிறந்த இடம்தான் என்று தீர்க்கப்பட்டது போன்று இனி இதுபோல் காசி விஸ்வநாத் கோயில், பிருந்தாவன் கோயில் விவகாரமும் தீர்க்கப்படவேண்டும் என்றும் கூறிய இந்துத்துவா வெறியன் அரசியல் அனாதை சுப்பிரமணிய சுவாமியை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
11. பாபரி மஸ்ஜித் பாணியில் இனி வேறொரு மஸ்ஜிதில் கைவைப்பதற்கு பாசிச சங்பரிவாரக் கும்பமல் முயற்சி செய்தால் அதே பாணியில் முஸ்லிம்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணித்து பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டார்கள் என்பதை இந்த செயற்குழு உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறது.
12. சட்ட வரம்பைத் தாண்டி மதச் சார்பின்மைக்கு எதிராகவும் மதநம்பிககையின் அடிப்படையிலும் வழங்கப்பட்ட அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும் மேல் முறையீட்டின் போது சட்ட வரம்பிற்கு உட்பட்டு இவ்வழக்கில் தீர்ப்பளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தை கோரியும் வருகின்ற ஜனவரி 4 2011 அன்று தமிழகம் தழுவிய அளவில் சென்னையிலும் மதுரையிலும் மாபெரும் பேரணி மற்றும் கண்டண ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கின்றது.
13. பாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்கள் இறுதியாக சுப்ரீம் கோர்ட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். முஸ்லிம்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில் மதநம்பிக்கைக்கு அப்பாற்பட்டு, இந்திய அரசியல் சாசனச் சட்டத்திற்கு உட்பட்டு மேல்முறையீடு செய்யபடும் பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதீமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று இந்தச் செயற்குழு நம்பிக்கைவைக்கிறது.
14. தமிழக வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஜுலை 4 2010 அன்று 15 இலட்சம் மக்கள் மத்திய அரசிடம் இந்திய அளவில் இட ஒதுக்கீடு கோரி தீவுத் திடலில் ஒன்று கூடினர். ஒடுக்கப்பட்டோரின் இந்த உரிமை மாநாட்டிற்கு பின்னர் ஏற்பட்ட பிரதமர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சந்திப்பின் போது இக்கோரிக்கைகளை அவர்களிடம் முன்வைத்தனர். அப்போது விரைவில் அக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்தனர். அந்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றும்படி பிரதமர் மன்மோகன்சிங் அவர்களையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களையும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
15. திருவிடைச் சேரியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது. அதே நேரத்தில் பள்ளிவாசல்களில் அல்லாஹ்வைத் துதிப்பதையும், தொழுவதையும் தடை செய்து குழப்பம் விளைவிப்பது கொலையை விடக் கொடியது. இத்தகைய அக்கிரமத்தனமான காரியங்களில் ஈடுபடுவர்கள் மீது பள்ளிவாசல் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இத்தகையவர்கள் பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்பில் இருந்தால் அவர்களை களையெடுக்க வேண்டும் என்றும் பள்ளிவாசல் நிர்வாகங்களையும் இஸ்லாமியப் பெருமக்களையும் இநதச் செயற்குழு வாயிலாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டிக் கொள்கிறது.
16. திருவிடைச் சேரியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பது வெள்ளிடை நீர் போல அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். தமிழகத்திலும் தமிழகத்திற்கு வெளியில் உலகமெங்கிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு பொதுமக்களிடம் ஆதரவு பெருவருகின்றது. ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் தவ்ஹீத் கொள்கையை பின்பற்றக்கூடிய மக்களாக மாறிவிட்டனர். 2010 ஜுலை 4 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கையை ஏற்று இட ஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் அணிவகுத்து வந்ததே மிகப் பெறும் சான்றாகும். இதனைப் பொறுக்க முடியாத தவ்ஹீதிற்கு எதிரான சில அமைப்புகள் மற்றும் இலட்டர் பேடு இயக்கங்கள் பள்ளிவாசலில் தொழுவதை தடைசெய்பவர்களையும் குழப்பம் விளைவிப்பவர்களையும் கண்டிக்காமல் திருவிடைச் சேரி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை மட்டும் பெரிது படுத்தி, பழியை தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது சுமத்தி இதன் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என பகற்கனவு காண்கின்றன. ஆனால் இவர்கள் எவ்வளவுதான் பழி சுமத்தினாலும், திட்டங்கள் தீட்டினாலும் சத்தியக் கொள்கையின் பேரொளியை அணைத்து விட முடியாதென்றும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் தவ்ஹீத் கொள்கைக்கும் எதிரான இவர்கள்தான் காணாமல் போவார்கள் என்றும் இந்த செயற்குழவின் வாயிலாக எச்சரிக்கிறோம்.
17. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்பை ஏற்று முஸ்லிம்களின் ஜீவாதாரக் கோரிக்கையான இந்திய அளவில் இட ஓதுக்கீட்டைப் பெறுவதற்காக தமிழக இஸ்லாமிய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஜுலை 4 அன்று சென்னைத் தீவுத் திடலில் சங்கமித்த இலட்சக் கணக்கான இஸ்லாமியப் பெருமக்களுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும், ஜமாஅத்தார்களுக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கும் இந்தச் செயற்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இதற்காக பொருளாதார உதவி செய்த வெளிநாடு, உள்நாடு கொள்கைச் சகோதரர்களுக்கும் அயராது பாடுபட்ட அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கும் இந்தச் செயற்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
18. தற்போது நடைபெற்று வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் முஸ்ம்கள் அனைவரின் எண்ணிக்கையும் விடுபட்டு விடாமல் இருப்பதற்கு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை முஸ்ம்கள் மத்தியில் நிகழ்த்துமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. மேலும் இடம் பெயர்ந்து வாழும் முஸ்ம்களின் எண்ணிக்கையையும் ஒருங்கிணைத்து அவர்களின் மொத்த மக்கட்தொகையளவை வெளியிடுமாறு மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
19. இதற்கென இந்திய வெளியுறவு அமைச்சகத்தையும் மற்றும் வெளிநாட்டு தூதரங்களையும் அணுகி ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்தி இடம் பெயர்ந்த இந்தி யர்களின் மொத்த எண்ணிக்கையையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளுமாறு இந்திய அரசை இச்செயற் குழு கேட்டுக் கொள்கிறது.
20. அடிக்கடி பாலஸ்தீனத்தில் முஸ்ம்களைக் கொன்று குவித்து வரும் இஸ்ரேன் காட்டுமிராண்டித் தனத்தை வன்மையாகக் கண்டிப்பதோடு அதன் மீது பொரு ளாதாரத் தடையை ஏற்படுத்த உலக நாடு களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இந்தியாவில் வாழும் 20 கோடி முஸ்லிம்க ளின் உணர்வுகளை மதித்து இஸ்ரேலுடன் உள்ள உறவைத் துண்டிக்குமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
21. முஸ்லிம்களுக்கு உரிய இட ஒதுக் கீட்டில் நடந்த குளறுபடிகளைச் சரி செய்வ தாக தமிழக அரசு முஸ்லிம் சமுதாயத்துக்கு கடந்த தேர்தலின்போது உறுதியளித்தனர். அதை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுத் ததாகத் தெரியவில்லை. எனவே கொடுத்த வாக்கை நிறைவேற்றுமாறு தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
22. முஸ்லிம்களில் பிற்பட்டவர்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டா லும் பிற்பட்ட முஸ்லிம்களும் மற்ற முஸ் லிம்களும் பொதுப் பட்டியலிலும் விண்ணப் பிக்க சட்டப்படி உரிமை இருந்தும் அதிகாரி கள் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்து வருகின்றனர். பொதுப் பட்டியலில் உள்ள 3 சத இடங்களிலும் முஸ்லிம்கள் போட்டியிட லாம் என்று தெளிவான ஆணை பிறப் பிக்குமாறு முதல்வரை இச்செயற்குழு கேட் டுக் கொள்கிறது.
23. சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவி, கல்விக் கடன் ஆகியவை சென்ற ஆண்டு அதிகாரி களின் ஆணவப் போக்காலும் கல்வி நிலை யங்களின் அலட்சியப் போக்காலும் பெரும் பாலான முஸ்லிம்களுக்கு கிடைக்க வில்லை. அதுபோல் இந்த ஆண்டு நடக்கா மல் இருக்க தெளிவான வழிகாட்டுதலை வழங்கி அலைக்கழிக்காமல் முஸ்லிம் சமுதாயம் பயன் பெற தெளிவான வழிகாட் டுதலை அறிவிக்குமாறு தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.










Thursday 7 October 2010

நக்கீரனை கண்டித்து நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டதில் கடந்த 6-10-2010 அன்று நக்கீரனை கண்டித்துநெல்லை சந்திப்பு ரயில்நிலையம் முன்புமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்க்கானோர் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்

Monday 4 October 2010

நக்கீரனை கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம்!


T
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டத்தில் இன்று (4-10-2010) நக்கீரனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.

நக்கீரனை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டத்தில் இன்று (4-10-2010)  நக்கீரனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செருப்பு மற்றும் துடப்பகட்டை போன்றவற்றுடன் வந்து சகோதர சகோதரிகள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.
மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

Friday 1 October 2010

வெள்ளிமேடை தீர்ப்பா? கட்டப்பஞ்சாயத்தா?

இன்ஷா அல்லாஹ்  (1-10-2010) வெள்ளி மேடையில் தீர்ப்பா கட்டயப்பஞ்சாயத்தா என்ற தலைப்பில் P.J அவர்கள் உரையாற்றுகின்றார்கள்.
இணையதளத்தில் ( www.onlinepj.com, www.tntj.net )  வெள்ளிமேடை வழக்கம் போல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்!

Thursday 30 September 2010

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: நீதி செத்துப் போய்விட்டது! – P.J யின் கண்டன உரை இன்று இமயம் டிவியில்!

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு இன்று வெளியானது. நீதி செத்து போய் விட்டது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு தொடர்பாக P.J  அவர்களின் கண்டன உரை இன்ஷா அல்லாஹ் இன்று (30-9-2010) இமயம் டிவியில் இரவு 10.30 மணிக்கு. காணத்வறாதீர்கள்!

பயங்கரவாதி நக்கீரன் கோபால்!

நக்கீரனில் வெளியான செய்தி குறித்து விளக்கம் அளிக்க இந்தக் கட்டுரை என்றாலும் இதனால் நான் பாதிக்கப்பட்டவன் என்பதால் கோபால் பற்றி என் பாதிப்புக்கு ஏற்ப விமர்சிப்பதற்கு உரிமை எனக்கு உள்ளது. எனது நிலையில் இருந்து இதை பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.-P.J

யார் இந்த கோபால் மாமா


என்னுடைய கடந்த கால வாழ்க்கை என்று இவன் பொய்யை வெளியிட்டுள்ளான். நான் இவனது கடந்த கால வாழ்க்கையின் உண்மையில் சிறு பகுதியுடன் ஆரம்பிக்கிறேன்.
ஷியாம் அவர்கள் நடத்தி வந்த தராசு பத்திரிகையில் ஓவியம் வரைபவனாக இருந்தவன் தான் நக்கீரன் கோபால் என்பவன். இவனுக்கு படம் வரையத் தெரியுமே தவிர ஒழுங்காக எழுதக் கூட தெரியாது.
இப்போதும் மற்றவர்கள் எழுதுவதைத் தான் தன் பெயரில் வெளியிட்டு வருகிறான்.
தராசு பத்திரிகையில் இருந்து கூலிக்கு எழுதும் சிலரைப் பிடித்து வந்து நக்கீரன் பத்திரிகையை ஆரம்பித்தான். ஆனால் பத்திரிகை ஓடவில்லை
இந்த நிலையில் இந்தியா டுடே பத்திரிகை சந்தனக்காட்டுக்கு தனது செய்தியாளர்களை அனுப்பி வீரப்பனிடம் வீடியோ பேட்டி எடுத்தது. கோபால் அந்த செய்தியாளரைச் சரிக்கட்டி அந்த வீடியோவை வாங்கினான். இந்தியா டுடே வெளியிடுவதற்கு முன்பே வீரப்பன் பேட்டியை இவன் வெளியிட்டான். தனது செய்தியாளர்கள் கஷ்டப்பட்டு காட்டுக்குச் சென்று வீரப்பனைச் சந்தித்ததாக புளுகி பல வாரங்கள் தொடர் வெளியிட்டான். இப்போது தான் நக்கீரன் என்ற பத்திரிகை உலகுக்குத் தெரிய வந்தது.
இவனது அறிமுகமே அயோக்கியத்தனத்தில் தான் ஆரம்பமாகிறது.
நக்கீரன் போன்ற பத்திரிகை நடத்த மூளை தேவை இல்லை. பணத்துக்காக எதையும் செய்யும் கேடு கெட்ட குணமும் கற்பனையும் காமராஜ் போல் காசுக்காக எதையும் செய்யும் இழிபிறவிகளின் உதவியும் இருந்தால் போதுமானது என்பதை தராசு பத்திரிகை அனுபவத்தில் இவன் கற்றுக் கொண்டான்.
உதாரணமாக ராமதாஸ், முதல்வரைத் தனியாகச் சந்தித்தார் என்ற செய்தி இவனுக்குக் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இருவரும் பேசிக் கொண்டது இருவருக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதையெல்லாம் இவன் எழுதுவான். இருவர் மட்டுமே உரையாடிய போது பேசிக் கொண்டது இவனுக்கு எப்படித் தெரியும்? என்று சிந்திக்க மறுக்கும் மக்களின் பலவீனம் தான் இவனுக்கு மூலதனம்
ஒவ்வொரு கட்டத்திலும் பத்திரிகை விற்பனைக்காக மாமா வேலைக்கு நிகரான செய்திகளை இவன் எழுதலானான். ஆட்டோ சங்கர் கதை என்ற பெயரில் பெண்களை சூறையாடிய கதைகளை கற்பனை செய்து எழுதி காசாக்கினான். அவ்வளவும் ஆபாசம் புளுகு மூட்டை.
நடிகைகள் பற்றி அந்தக் கால இந்து நேசன் பாணியில் காமக் களஞ்சியத் தொடர் எழுதினான். இதில் பெரும்பகுதி எந்த ஆதாரமும் இல்லாமல் காம உணர்வை ஊட்டிய எழுத்து விபச்சாரம் தான்
இவன் எழுதியது போல் இவனது குடும்பத்து பெண்களின் காமச் சேட்டைகள் என்று நாம் எழுதினால் அதை இவன் ஜீரணித்துக் கொள்வானா? கோபால் வீட்டுக்குள் ஒருவன் போவதை மட்டும் பார்த்து விட்டு உள்ளே நடந்ததை நாம் இவனைப் போல் எழுதினால் அதை ஜீரணித்துக் கொள்வானா?
சட்ட விரோதமாக சந்தன வீரப்பனைச் சந்தித்து தேசத்துக்குத் துரோகம் செய்தவன். சந்தன வீரப்பன் நாடகத்தில் கோடிகளைச் சுருட்டியவன். எழுத்துலகில் காசுக்காக எதையும் செய்யும் இழி பிறவி இவனைத் தவிர வேறு யாரும் கிடையாது. அடுத்த இடம் காமராஜ் என்ற எச்சில் பொறுக்கிக்குக் கொடுக்கலாம்.
ரஜினி பெயரை ஆதாயமாக்க ரஜினி ரசிகன் என்று பத்திரிகை நடத்தினான். ஒவ்வொரு நடிகன் பெயரிலும் பத்திரிகக் நடத்தி இளைஞர்களைக் கெடுத்தவன். காசு சம்பாரிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் கேடு கெட்டவன் தான் இந்தக் கோபால்.
கற்பனை கலந்து எத்தனையோ பெண்களைப் பற்றி தப்பும் தவறுமாக எழுதி அவர்களின் குடும்ப வாழ்வைச் சீரழித்தவன். முஸ்லிம் குடும்பங்களில் ஏற்படும் குடும்பச்
சண்டைக்குள் நுழைந்து எதையாவது எழுதி அவர்களின் வாழ்வையே சீரழித்து பணம் சம்பாரிக்கும் அற்பன் தான் இந்தக் கோபால்.
இவனுக்கு இதன் வலியை உணரச் செய்வதற்காக இவனது அந்தரங்கச் சேட்டைகள் பற்றியும் மற்றவர்களின் குடும்பம் பற்றி இவன் எழுதுவது போல் இவனது குடும்பம் பற்றியும் யாராவது எழுதினால் நல்லது. இவனுக்கு கொஞ்சமும் சளைக்காத காம?ராஜ் என்பவன் பற்றியும் அவன் எழுதுவது போன்ற நடையில் யாராவது எழுதினால் தான் இவன் அடங்குவான்.
பத்திரிகை இப்போது சுத்தமாக படுத்து விட்டது. எனவே தான் நபிகள் நாயகம் பற்றி இரண்டு தடவை கற்பனை செய்தி வெளியிட்டு பத்திரிகை விற்பனையைத் தூக்கி நிறுத்தப் பார்த்தான். இவனை இப்படியே விட்டால் தொடர்ந்து வாலாட்டுவான் என்பதால் இவனுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் போராட்டத்தை நடத்தியது.
இனிமேல் இவன் நபிகள் நாயகம் பற்றி தரக்குறைவாக எழுதினால் பத்திரிகை அலுவகம் இருக்காது என்ற பாடத்தை தவ்ஹீத் ஜமாஅத் படித்துக் கொடுத்தது.
இதன் பின்னர் பத்துப் பேர் கூட இல்லாத பொய்யன் பற்றி அடிக்கடி பில்டப் செய்திகளை வெளியிட்டு நமக்கு கடுப்பு ஏற்படுத்தலாம் என்று நினைத்தான்.
புலி கேசியான புண்ணாக்கு தொடர் எழுதி நிமிர்த்தப் பார்த்தான். ஒன்றும் கை கூடவில்லை
அந்தக் காழ்ப்புணர்வின் வெளிப்பாடு தான் அட்ரஸ் இல்லாத மூன்று பேரின் பேட்டி என்ற பெயரில் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருப்பது.
இவன் ஒரு எழுத்து விபச்சாரி என்பதற்கு ஆதாரம் யாரைப் பற்றி எழுதுவதாக இருந்தாலும் அவர்களின் கருத்தையும் கேட்டு பிரசுரிக்க வேண்டும், என்னிடம் இது பற்றி கருத்து கேட்காமல் வெள்யிட்டதில் இருந்து இவன் எழுத்து விபச்சாரி என்பது உறுதியாகிறது.
எழுத்துலக மாமா நக்கீரன் கோபால் கூறுகிறான்
பேட்டியில் இருந்து
இப்படிப்பட்ட சூழலில் தான், 1997 டிசம்பர் 6-ந்தேதி பாண்டியன், சேரன், ஆலப்புழை ரயில் களில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்து தமிழகத்தை உலுக்கியது. பி.ஜே.வின் வன்முறை கலந்த பேச்சுக்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள்தான் இதனை செய்திருக்கிறார்கள். குண்டு வைக்க தூண்டியது பி.ஜே.தான். இதனால் அப்போதே பி.ஜே.வை அழைத்து விசாரித்தது தமிழக உளவுத்துறை. சந்தேக வலை தன்னை சுற்றி விழுவதை அறிந்த பி.ஜே., குண்டு வைத்தவர்களை சொல்கிறேன் என்று சொல்லி எங்களை காட்டிக் கொடுத்தார். எங்களுக்கும் அந்த சம்பவத்துக்கும் சம்பந்தமே இல்லை. நாங்கள் குண்டு வைக்கவே கிடையாது” என்று விவரித்தனர்.
இப்படி மூவர் சொன்னதாக இவன் எழுதுகிறான்.

நமது விளக்கம்

இவர்கள் குண்டு வைக்கவில்லை என்று மூவரும் சொல்கின்றனர். குண்டு வைக்காத இவர்களைப் பற்றி நான் காவல் துறையில் சொல்லி இருந்தால் அது எப்படி காட்டிக் கொடுத்ததாக ஆகும்? குண்டு வைக்காத இவர்கள் மீது நான் பொய்யாக தகவல் கொடுத்தால் அதை ஏற்று காவல் துறை வழக்கு போட்டிருக்குமா?
நாங்கள் தான் குண்டு வைத்தோம்; அதை பீஜே காட்டிக் கொடுத்தார் என்று இவர்கள் கூறினால் தான் நான் காட்டிக் கொடுத்தாக ஆகும். நாங்கள் குண்டு வைக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்’ பீஜே காட்டிக் கொடுத்தார் என்றும் சொல்கிறார்கள். முரண்பட்ட இரண்டில் எது உண்மை.
குண்டு வைக்காத நாலு அப்பாவிகளைப் பற்றி இவர்கள் தான் குண்டு வைத்தார்கள் என்று ஒருவன் சொன்னால் உடனே காவல் துறை வழக்குப் பதிவு செய்யுமா? நான் தமிழக முதல்வராக இருந்து அப்படிச் சொன்னால் வேண்டுமானால் நடக்கலாம்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கு குறித்து காவல் துறை என்னை விசாரித்தது உண்மை. அதற்குக் காரணம் குண்டு வைத்தவர்கள் என் பெயரையும் இழுத்து விட்டது தான். அதை அல் உம்மா தொடரில் விளக்கியுள்ளேன்.

பேட்டியில் இருந்து ...

குண்டு வெடிப்புகளை தவிர்த்து பார்த்தோமேயானால்… முஸ்லிம்களின் மதகுருக்கள் கொல்லப்பட்டதற்கும் பின்னணியில் இவர் இருந்துள்ளார். உதாரணத்திற்கு… 8.8.97-ல் கே.கே நகர் பள்ளிவாசல் மதகுரு கமருஸ்ஜமான் கொல்லப்படுகிறார். பி.ஜே.வி.ன் தூண்டுதலில் இது நடந்தது. பள்ளி ஜமாத்தின் புகாரிலே பி.ஜே. பெயர் இருக்கிறது
என்று மூவரும் சொன்னதாக கோபால் சொல்கிறான்.

எனது பதில்
கொல்லப்பட்ட மத குருக்கள் யார்?
கொன்றவர்கள் யார்?

பீஜே சொல்லித் தான் நான் மத குருக்களைக் கொலை செய்தேன் என்று யாராவது போலீஸிலோ நீதிமன்றத்திலோ சொல்லி இருக்கிறார்களா?
அப்படிச் சொல்லி விட்டு பீஜே பின்னணியில் இருந்தார் என்று கூறினால் தான் அது பதில் சொல்லத் தக்கதாக இருக்கும்.
பள்ளி ஜமாஅத்தின் புகாரிலேயே பிஜேயின் பெயர் இருக்கிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பள்ளி ஜமாஅத்தின் புகாரின் என் பெயர் இருக்கிறதா என்பது நினைவில் இல்லை. ஆனால் சுன்னத் ஜமாஅத் பள்ளி இமாம் ஒருவர் கொல்லப்பட்டால் அதன் பின்னணியில் பலர் சந்தேகிக்கப்படுவார்கள். அந்த அடிப்படையில் அவர்கள் என் பெயரைக் குறிப்பிட்டு இருக்கலாம். அப்பட்டமாகத் தெரிந்த திருவிடைச்சேரி கொலையில் என் பெயரை சிலர் இழுத்து விடுவதை பார்க்கிறோம்.
ஆனால் கமருல் ஜமான் குடும்பத்தைப் பள்ளி நிர்வாகம் கை விட்டது. அந்தக் குடும்பத்தினர் நான் அமைப்பாளராக இருந்த தமுமுகவை அணுகி உதவி கேட்டனர். அவர்களுக்காக உணர்வு இதழ் மூலம் நிதி திரட்டி அந்தத் தொகையை வழங்கினோம். அவரது பிள்ளைகள் படிப்புக்கும் தமுமுக சார்பில் ஏற்பாடு செய்தோம். பள்ளி நிர்வாகிகள் என் பெயரைக் குறிப்பிட்டு இருந்தாலும் அவரது குடும்பத்தினர் அதைப் பொய்யாக்கி விட்டனர்.
குண்டு வைக்காத இவர்கள் பெயரை நான் சொன்னதும் இவர்களைக் காவல் துறை கைது செய்தது என்று கூறுகின்றனர். அப்படியானால் பள்ளிவாசல் நிர்வாகம் என் பெயரைச் சொல்லி இருந்தும் காவல் துறை அந்த வழக்கை ஏன் என் மீது போடவில்லை. அன்று அரசுக்கும் காவல் துறைக்கும் நாங்கள் (தமுமுக) கடும் எதிரிகளாக இருந்தோம். எங்களுக்கு எதிரான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில் இப்படி ஒரு வாக்கு மூலம் இருந்து அது உண்மையாகவும் இருந்தால் என்னைத் தானே அந்த வழக்கில் சேர்க்க வேண்டும். இவர்கள் கூறுவதில் உண்மை இல்லை என்பது இவர்களின் வாக்கு மூலத்தில் இருந்தே தெளிவாகிறது


பேட்டியில் இருந்து....

அதேபோல நாகூர் ஆலிம் ஜார்ஜ் என்பவரை கொல்ல சில இளைஞர்கள் போகிறார்கள். அவரை கொல்ல இளைஞர் கள் முயற்சித்தபோது அவரது மனைவி கொல்லப்பட்டு விடுகிறார். அந்த இளைஞர்களை அனுப்பியது பி.ஜே.தான். ஆனால் அப்பாவி இளைஞர்கள் சிலரை இந்த சம்பவத்தில் மாட்டிவிட்டுவிடு கிறார். 14 வருடங்களாக இன்னமும் சிறையில் இருக்காங்க அந்த அப்பாவி இளைஞர்கள். இப்படி நிறைய சொல்ல முடியும்.

எனது பதில்

ஆலிம் ஜார்ஜ் விஷயத்தில் கொல்ல முயன்ற இளைஞர்கள் அப்படி சொன்னார்களா? வாக்கு மூலம் கொடுத்தார்களா? நீதி மன்றத்தில் சொன்னார்களா? அப்படி சொல்லி இருந்தால் இதில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகமாவது இருக்கும். நாங்கள் மூவரும் தான் ஆலிம் ஜார்ஜை கொல்ல முயன்றோம் பீஜே தூண்டி விட்டார் என்று கூறப் போகிறார்களா? இந்த வாக்கு மூலத்தில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டு இம்மூன்றும் தான்.
இது தவிர பொதுவாக சில குற்றச் சாட்டுக்களையும் கூறியுள்ளனர்.

 பேட்டியில் இருந்து ...

அதுவும் முஸ்லிம்களிடம் தனது செல்வாக்கு சரியும் போதெல்லாம் வன்முறை பேச்சை கையிலெடுப்பது இவரது வாடிக்கை.

எனது பதில்


செல்வாக்கு சரியும் போதெல்லாம் பீஜே இப்படிச் செய்வார் என்ற இந்த அபத்தமே இவர்களைத் தோலுரித்துக் காட்ட போதுமானாது.
செல்வாக்கு குறித்து நான் எப்போதும் பேசுவதில்லை. அதையே ஒரு ஆதாரமாகக் காட்டும் போது அதைச் சொல்லித் தான் ஆக வேண்டும்.
ஜுலை 4 மாநாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாநாடு என்றாலும் அதைத் தோல்வியுறச் செய்வதற்காக பீஜே என்ற தனிமனிதனை மையப்படுத்தியே பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர். அந்த மாநாடு தோல்வியில் முடிந்திருந்தால் செல்வாக்கு சரிந்து விட்டது எனலாம்.
இவர்கள் சிறைக்குப் போகும் போது இருந்ததை விட இலட்சம் மடங்கு வளர்ச்சி தான் ஏற்பட்டுள்ளது என்பதற்கு இலட்சக்கணக்கானோர் கூடிய மாநாடு சாட்சி
நாட்டின் பிரதமரையே தாமதமின்றி சந்திக்க முடிவது மற்றொரு சான்று.
செல்வாக்கு சரிந்து விட்டது என்பதே பச்சைப் பொய் என்பது இதில் இருந்து தெரிகிறது.
மேலும் நான் செல்வாக்குக்கு என்றும் ஆசைப்பட்டதில்லை. ஜாக் நல்ல வளர்ச்சி அடைந்திருந்த நேரத்தில் தான் நான் அதன் பொறுப்பை விட்டு விலகினேன். தமுமுக அபார வளர்ச்சி பெற்றிருந்த காலத்தில் அதன் முதல் நிலை பொறுப்பாகிய அமைப்பாளர் பொறுப்பில் இருந்து நானாக விலகினேன். தொண்டனாக தொடர்ந்தேன். அதன் பின் தவ்ஹீத் ஜமாஅத் மபெரும் மக்கள் இயக்கமாக உள்ள இந்த நேரத்தில் நான் அதன் தலைவர் பத்வி மேலாண்மைக்குழு தலைவர் பதவி ஆகியவற்றை விட்டு விலகி அதில் உறுப்பினாரக் இருக்கிறேன். ஜெயிலில் இருந்து வந்தவுடன் அமைப்பாளர் பதவிக்கு பேரம் பேசி செல்வாக்கு பெற துடிப்பவர்கள் இதைச் சொல்வது தான் கேலிக்கூத்து.
செல்வாக்கு சரியும் போதெல்லாம் வன்முறை பேச்சைக் கையில் எடுப்பார் என்று கூறும் இவர்கள் எனது வன்முறை பேச்சுக்கு ஒரு ஆதாரத்தையும் எடுத்துக் காட்ட முடியாது.


 ஒன்று மட்டும் உண்மை



இவர்கள் கூறுவதில் ஒரு விஷயம் மட்டுமே உண்மை.
1992 டிசம்பர் ஆறில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் எனது எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டது. சட்டமும் அரசும் முஸ்லிம்களுக்கு நீதி வழங்காது; நாம் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் இருந்தேன். ஆக்ரோஷமாக பேசியுள்ளேன். அல் ஜன்னத்தில் கடுமையான தலையங்கங்களை எழுதியுள்ளேன்.
அந்த நேரத்தில் எனது பேச்சால் சிலர் வேறு பாதைக்குச் சென்றிருக்கலாம்.
உணர்ச்சி வேகத்தில் அந்தக் கருத்தில் இருந்த நான் ஜனநாயக ரீதியில் நாம் போராடாமல் அரசியல் கட்சிகளின் பின்னே சென்றது தான் இந்த நிலைக்குக் காரணம் என்று உணர்ந்தேன்.
ஜனநாயக ரீதியில் போராடும் சமூக அமைப்பு அன்று உ.பியில் இருந்திருந்தால் 1949ல் ராமர் சிலை பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்ட போதே அவை அகற்றப்பட்டிருக்கும். காங்கிரசை நம்பியதால் தான் மோசம் போனார்கள் என்பதை உணர்ந்து அத்தகைய அமைப்பைக் கட்டி அமைப்பதில் கவனம் செலுத்தினேன். என் கருத்தில் இன்னும் சிலரும் உடன்பட்டனர். அதன் விளைவு தான் தமுமுக.
மேலும் வன்முறைக்கும் ஜிஹாதுக்கும் உள்ள வேறுபாடு குர்ஆனைத் தமிழாக்கம் செய்வதற்காக நான் ஆய்வுகள் செய்த போது தெளிவாகத் தெரிந்தது.
முஸ்லிமல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதற்கு வன்முறை தடையாக நிற்கிறது என்பது எனக்குத் தெரிந்த பின் அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
நான் தீவிரமான எண்ணப் போக்கில் இருந்த போது தான் சிறைவாசிகளுக்ககாக எந்த விளைவு ஏற்பட்டாலும் கவலையில்லை என்று துணிந்து இறங்கினேன். அந்தக் கருத்தில் நான் இருந்த போது அது சரியானது என்று பட்டதால் நான் அதில் மிக உறுதியாக இருந்தேன். இரட்டை நிலை மேற்கொண்டதில்லை. அது தவறான கருத்து என்று தெரிந்த போது அதில் உறுதியாக இருக்கிறேன். இப்போதும் என்னிடம் இரட்டை நிலை இல்லை. ஒரு காலகட்டத்தில் நான் இரட்டை நிலை எடுத்ததில்லை.
அடுத்து பொது மேடையில் விவாதிக்க அழைப்பு விட்டுள்ளனர். இது குறித்து இந்தப் பேட்டி வெளியாவதற்கு முன்பே ஏற்றுள்ளேன். பார்க்க
முறைப்படி குற்றச் சாட்டுக்களை பட்டியல் போடட்டும். அவர்களைப் பற்றி அம்பலப்படுத்தும் பட்டியலை நான் போடுகிறேன். முறையாக ஒப்பந்தம் செய்து விவாதிக்க நான் தயார்.

Wednesday 29 September 2010

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 26-9-2010 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பாஸ் அலி எம்.ஐ.எஸ்.சி அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் பதில் அளித்தார்கள்.

Sunday 22 August 2010

நடந்தது என்ன?

எஸ்.பி.மைதீன் அவர்களை 30.04 .2010 அன்றே TNTJ நகர செயற்குழு கூடி பொறுப்பிலிருந்து நீக்கியது.


மேலப்பாளையத்தில் நகர தலைவராக இருந்த எஸ்.பி. மைதீன் என்பவர் பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பெண் தொடர்பு குற்றச்சாட்டு வருவதற்கு முன்பே ஜமாஅத் பணிகளில் இருந்து விலகி விட்டார். எனவே இவரை௦ 30.04 .2010 அன்று நகர செயற்குழு கூடி பொறுப்பிலிருந்து நீக்கியது. புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டு பத்திரிக்கைகளிலும் செய்தி வெளியானது. அதன் பின்னர் பெண் தொடர்பு குற்றச்சாட்டு எழுந்தவுடன் இவரை அழைத்து விசாரித்த போது,குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட அவர், தான் வகித்து வந்த மஸ்ஜிதுர் ரஹ்மான் செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்து கடிதம் கொடுத்து விட்டு ஜமாத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்து வருகிறார். மேற்படி குற்றச்சாட்டுக்கு பிறகு நடைபெற்ற டி.என்.டி.ஜே. பொதுக்குழு மற்றும் மஸ்ஜிதுர் ரஹ்மான் பொதுக்குழு ஆகியவற்றில் எஸ்.பி. மைதீனுக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை. அவருடன் ஜமாஅத் உறுப்பினர்கள் எந்த தொடர்பும் கொள்ளக்கூடாது என்று மேற்படி பொதுக்குழுவில் பகிரங்கமாக அறிவிப்பும் செய்யப்பட்டது. தற்போது எஸ்.பி. மைதீன் டி.என்.டி.ஜே.யின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.
 

 
நகர நிர்வாக குழு கூட்டம் – 30.04.2010



பத்திரிக்கை செய்தி – 05 MAY 2010


குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட எஸ்.பி.மைதீன், தான் வகித்து வந்த மஸ்ஜிதுர் ரஹ்மான் செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்து கடிதம் எழுதி கொடுத்தது - 06.07.2010

தவறு செய்வோர் பாக்கராக இருந்தாலும் சரி மைதீனாக இருந்தாலும் சரி. இருவருக்கும் ஒரே நீதிதான்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)