Tuesday 25 January 2011

ஜனவரி 27 போராட்டம் – எழுப்பப்பட வேண்டிய கோஷங்கள்!

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்


போராட்டம் இது போராட்டம்

அநியாயத் தீர்ப்பை எதிர்த்து தட்டிக் கேட்கும் போராட்டம்



ஐயோ ஐயோ ஹைகோர்ட்டு அலகாபாத்து ஹைகோர்ட்டு உலகமெல்லாம் கைகோர்த்து காரி உமிழுது உனைப் பார்த்து



இடித்தவனுக்கு இரு பங்கு

இழந்தவனுக்கு ஒரு பங்கு

நியாயம் தானா நியாயம் தானா



பாபர் மஸ்ஜித் மையப் பகுதியில்

ராமர் பிறந்தார் என்றாயே

உன் பாட்டன் பிறந்த இடம் என்று

சொல்ல உனக்குத் திராணி உண்டா



ராமர் ஆலயம் இருந்த இடத்தை

பாபர் இடித்தார் என்றாயே

ஆலயம் இடித்த இடத்தினிலே

மசூதி கட்டினார் என்றாயே

ராமர் ஆலயம் இருந்த இடத்தில்

என்ன ஆலயம் இருந்தது என்று

சொல்வாயா சொல்வாயா

எந்த ஆலயத்தை இடித்து விட்டு

ராமர் கோவில் எழுந்தது என்று

சொல்வாயா சொல்வாயா



ராமர் பிறந்த இடம் என்றால்

ராமருக்கு சொந்தம் என்றால்

நாங்கள் பிறந்த ஆஸ்பத்திரி

எங்களுக்கு என்பாயா

இப்படி தீர்ப்பு சொல்வாயா



பாபர் வாழ்ந்த காலத்திலே

ராமர் கோவில் இருந்ததில்லை

சர்வபள்ளி கோபாலும் சொன்னாரே சொன்னாரே

இல்லாத கோவிலை இடித்து விட்டான் என்றாயே



அயோத்தி மாநகர் தனில்

ஈராயிரம் ஆண்டுக்கு முன்னர்

மனித இனம் வாழ்ந்ததில்லை

அகழ்வாராய்ச்சி சொன்னதுவே

அகழ்வாராய்ச்சி அறிவிப்பை

குப்பைக் கூடையில் எறிந்தாயே



அப்பத்தை பங்கு போட்ட

குரங்குகளின் தீர்ப்பு என்று

மூன்று குரங்குகளின் தீர்ப்பு என்று

பர்ஹானும் சொன்னாரே

நாக்கைப் பிடுங்கிச் செத்தாயா



குரங்குகளின் குதர்க்கத் தீர்ப்பை

வரவேற்கச் சொன்னாரே

கருணாநிதி சொன்னாரே

ஜெயலலிதா சொன்னாரே

ராகுல் காந்தி சொன்னாரே

உன் அப்பன் வீட்டுச் சொத்து என்றால்

வரவேற்பு கொடுப்பாயா

உன் கட்சியின் சொத்து என்றால்

வரவேற்று மகிழ்வாயா



கட்டுச் சோற்றில் பெருச்சா

கருப்புக் கோட்டில் கருங்கா

நல்ல ஆட்டுக் கூட்டத்திலே

குள்ள நரிகள் புகுந்ததுவே



அலஹாபாத்து ஹைகோட்டே அலஹாபாத்து ஹைகோட்டே காவி தீவிரவாதிகளோடு கை கோர்த்தது சரிதானா?

சட்டத்துக்கு எதிராக

சதி செய்தது முறை தானா?



ஏற்க மாட்டோம் ஏற்க மாட்டோம் அநியாயத்தை ஏற்க மாட்டோம்!

பேடிகள் வழங்கிய கேடி தீர்ப்பை ஒருக்காலும் ஏற்க மாட்டோம்!



தீர்ப்பு வழங்கும் முன்னரே உளவுத் துறைக்குத் தெரியுது உள்துறைக்கும் தெரியுது

கள்ளத்தனமாய் காவிக் கூட்டம் அத்தனைக்கும் தெரியுது நடந்தது என்ன நடந்தது என்ன விசாரணை நடத்து விசாரணை நடத்து



அகர்வால், சர்மா, கான் என்று

அழியா நினைவுச் சின்னங்கள் அழுகிப் போன ஹைகோட்டுக்கு இழிவு சேர்க்கும் கோட்சேகள்

கருப்பு கோட்டுக்குப் பின்னாலே ஒளிந்து கொள்ள எண்ணாதே!



சுப்ரீம் கோட்டே சுப்ரீம் கோட்டே

நீதி வழங்கு நியாயம் வழங்கு தானே வழக்கை எடுத்துக் கொண்டு

உடனடியாக நீதி வழங்கு!



அயோத்தி வழக்கில் ஹைகோட் தீர்ப்பு நீதித் துறையின் பயங்கர வாதம்



நமது நாட்டு காஷ்மீரில் உரிமை கோருது பாகிஸ்தான் பங்கு போட்டுக் கொடுப்பாயா

பள்ளம் தோண்டி பார்ப்பாயா



பறித்திடு பறித்திடு பதவியைப் பறித்திடு

பதவி பறிக்க நடவடிக்கை பாராளுமன்றமே எடுத்திடு



வெளியிடு வெளியிடு சொத்துக் கணக்கை வெளியிடு

காவி தீவிர கும்பலோடு உனது தொடர்பை வெளியிடு



அலகாபாத்து ஹைகோர்ட்டு அழுகிப்போன ஹைக்கோர்ட்டு

உச்ச நீதி மன்றமே

உரக்கச் சொன்ன தீர்ப்பிது



வெட்கங் கெட்ட கானே

விவஸ்தை கெட்ட கானே

காவியுடன் கை கோர்க்க

கண்ட பலன் சொல்வாயா



வெட்கக் கேடு வெட்கக் கேடு நீதித்துறைக்கே வெட்கக் கேடு

சர்மாவும் அகர்வாலும்

இந்தியாவின் சாபக்கேடு



அழிந்து போ இழிந்து போ

அநியாயமே ஒழிந்து போ தோண்டிப் பார்த்து முடிவெடுத்தால் நாடு முழுவதும் புதைகுழியே

நிலுவையில் உள்ள வழக்கில் எல்லாம் இப்படி தீர்ப்புச் சொல்வாயா உன் அப்பன் பாட்டன் சொத்தா இருந்தால்

பங்கு போட்டுத் தருவாயா இனிய இந்திய தேசத்தை இரத்தக் களரி ஆக்காதே

ஆட்சிக்காக ஆசைப்பட்டு

சர்ச்சைகளைக் கிளப்பாதே



தீர்ப்பு எழுதச் சொன்னோமா?

கதை எழுதச் சொன்னோமா

காவிக் கும்பல் சொன்னதயே

வாந்தி எடுக்கச் சொன்னோமா



ஆவனங்கள் தந்தோமே

பார்த்தாயா பார்த்தாயா

ஆதாரங்கள் தந்தோமே

படித்தாயா படித்தாயா

அடுக்கடுக்காய் வாதங்கள் எடுத்து பல சொன்னோமே

கேட்டாயா கேட்டாயா

போதையில் நீ இருந்தாயா பேதலித்துப் போனாயா



குலையுதே குறையுதே

நம்பிக்கை குறையுதே

நீதித் துறையின் மீது இருந்த நன்மதிப்பு குலையுதே பஞ்சாபில் காலிஸ்தான்

காஸ்மீரில் பாகிஸ்தான் வடகிழக்கில் மாவோயிஸ்ட் ஆந்திராவில் நக்ஸலைட் மும்பாயில் தாக்கரே குஜராத்தில் மோடிக் கும்பல்

இந்தியா முழுவதும் பரிவாரம் இரத்த வெறி பிடித்தவர்கள்

இத்தனை பேர் போதாதா

உத்திரப் பிரதேச ஹைக்கோர்ட்டும்

கை கோர்ப்பது தேவை தானா



விடமாட்டோம் விடமாட்டோம் பள்ளி வாசலை விடமாட்டோம்!

பள்ளி வாசல் நிலத்திலே கை வைக்க விடமாட்டோம்!



எல்லை உண்டு எல்லை உண்டு

பொறுமைக்கும் எல்லை உண்டு

பொறுமையாக இருப்பதாலே

கோழை என்று எண்ணாதே



Monday 24 January 2011

மேலப்பாளையத்தில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் 35 -ஆவது வார்டு சார்பாக ஆசுரா மேலத் தெருவில் கடந்த 23.01.11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் அல்-இர்ஷாத் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்!



Sunday 23 January 2011

மேலப்பாளையத்தில் ஜனவரி 27 ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 22-1-11 அன்று ஜனவரி 27 ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் நகர நிர்வாகிகள் மற்றும் வார்டு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகரத்தலைவர் ரோஷன் மற்றும் நகர நிர்வாகிகள் உரையாற்றினார்கள்..